

சாமானியர்களுக்கும் சர்வதேசக் கல்வி!
உலகத்தர சூழலில் “கல்வி க்ரூப் ஆப் ஸ்கூல்ஸ்”!
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கவும், அவர்களுக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்கவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். அதற்கான வழியாக, அக்குழந்தைகளுக்கு ஒரு நல்ல கல்விச் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதே சரியாக இருக்கும்.
இதற்கு வழிவகை செய்யும் விதமாக, 'கல்வி க்ரூப் ஆப் ஸ்கூல்ஸ்' மதுரை, திண்டுக்கல், தேனி, போன்ற இடங்களில் தங்களது பள்ளிகளை அமைத்து மாணவர்களுக்கான உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்கி வருகிறார்கள்.
பாடப்புத்தகம் தாண்டிய செயல்முறை கல்வி...
வருங்கால உலகினை எதிர்கொள்ள, மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் மட்டுமே போதுமானதாக இருக்காது. ஆகவே, அவர்களை அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கியம், விளையாட்டு என பலதரப்பட்ட துறைகளில் தயார் செய்வது முக்கியமாகிறது.
கேம்பிரிட்ஜ் சாதனை: கடந்த பத்து ஆண்டுகளாக 'கேம்பிரிட்ஜ்' பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் இவர்கள், தங்களது பள்ளி மாணவர்களை தேர்வு எழுத செய்கின்றனர். இதில் 650 மாணவர்களில் 56 மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
'கல்வி' பள்ளிக்கழுவின் சிறப்பு கல்வி முறைகள்
கல்வியின் பயன் என்பது, மாணவர்களுக்கு சுயமாக சிந்திக்கும் ஆற்றலை கொடுப்பதே அன்றி, அவர்களை என்ன சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக இருக்கக்கூடாது. அதற்கு, உலகின் பரந்து விரிந்த ஞானத்தின் வெளிச்சம் மாணவர்களுக்கு கிடைக்கச் செய்வது அவசியமாகிறது.
"சர்வதேசக் கல்வி இனி சாமானியர்களுக்கும்" என்பதை முன் நிறுத்தி, மாணவர்களை ஜே.இ.இ போன்ற தேர்வுகளில் பங்குபெறச் செய்து, அவர்கள் எதிர்காலத்தில் வெளிநாட்டிற்குச் சென்று கல்வி கற்கும் வாய்ப்பினை இவர்கள் வழங்கி வருகிறார்கள்.
இவர்கள், மாணவர்களின் வாசிப்பு மற்றும் கல்வியறிவை மேம்படுத்தும் நோக்கில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் 'வேர்ல்ட் புக் கார்ப்பரேஷன்' (சிகாகோ, யு.எஸ்.ஏ) நிறுவனத்துடன் இணைந்து கற்பித்து வருகிறார்கள்.
என்பதை அடிப்படையாகக் கொண்டு விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை, ஹெச்.சி.எல் பவுண்டேஷனுடன் இணைந்து, கூடைப்பந்து, கால் பந்து, மட்டைப்பந்து, பூப்பந்து ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் முறையாகப் பயிற்சியளித்து ஒலிம்பிக்கில் பங்கு பெறச் செய்யும் நோக்கில் செயல்பட்டு வருகிறார்கள்.
மாணவர்களின் கல்வியறிவு மற்றும் தனித்திறனை வளர்த்தெடுக்கும் நோக்குடன், அவர்களுக்கான நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்க விரும்பும் பெற்றோர்கள், கல்வி, க்ரூப் ஆப் ஸ்கூல்ஸ்-ஐ தேர்ந்தெடுக்கலாம்.
