கல்வி வளர்ச்சி நாள் விழா
முன்னாள் முதலமைச்சரும் பெருந்தலைவருமான கல்விக்கண் திறந்த காமராசர் அவர்களின் பிறந்த நாள் (ஜூலை 15,2025) செவ்வாய்க்கிழமை அன்று கல்வி சர்வதேச பொதுப்பள்ளி நகரி சோழவந்தான் வளாகத்தில் கல்வி வளர்ச்சி நாளாக மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு இசை முரசு. மதிப்புறு .முனைவர் கவிஞர். இனியன்.M.SC,M.ED,M.PHIL,PGDCA) அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார்.
விழாவானது தமிழுக்கு தலைவணங்கி தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டு,கல்வி வாழ்த்துடன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைக்கப்பட்டது.
விருந்தினர் சிறப்புரை
விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர் மதிப்புறு முனைவர்.திரு. இனியவன் அவர்கள் மாணவர்களிடம் கல்வியின் மேன்மையை உணர்த்தும் வகையிலும், உழைப்பின் பெருமையை உணர்த்திடும் வகையிலும், எண்ணற்ற மேற்கோள்கள் கொண்டு அரங்கின் மெய் விதிர்க்க தன் குரல் வளத்தால் அனைவரையும் அகம் மகிழ்வித்தார் .மேலும் பிரமிக்க வைக்கும் குரல்நடையால் எண்ணற்ற தன்னம்பிக்கைப் பாடல்களை மாணவருடன் இணைந்து பாடி அவர்களை தன் வயப்படுத்தி, தான் விதைக்க நினைக்கும் விதைகளை சற்றும் சலிப்பின்றி, மாணவர் மனதில் விதைத்தார். கல்வியில் பயிலும் மாணவர்களும் உற்சாகம் குறைவு படாமல் அகமகிழ்ந்து ஆரவாரம் இன்றி கேட்டு மகிழ்ந்தனர்.
பரிசளிப்பு விழா
பள்ளி மாணவர்களிடையே கல்வியின் மேன்மையை உணர்த்திடும் வகையில் பல்வேறு போட்டிகள் பிரிவு வாரியாக நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு சிறப்பு விருந்தினரின் கரங்களால் பரிசுகளும் பாராட்டுகளும் அளிக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டனர்.விழாவானது மாணவர்களால் முற்றிலும் தொகுத்து வழங்கப்பட்டது. இறுதியாக தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.
விருந்தினரைக் கௌரவித்தல்
விழாவின் சிறப்பு விருந்தினர் ,இசை முரசு முனைவர் .கவிஞர் .திரு இனியவன் அவர்களை கல்வி சர்வதேச பொதுப் பள்ளியின் துணை முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களால் பொன்னாடை மற்றும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
Add New Comment